பிளாட்பாரத்தில் பாடி பிச்சை எடுத்த பெண்ணிற்கு இப்படி ஒரு மாற்றமா? கோடியில் ஒரு பெண்மணி இவர்தான்!
மேற்குவங்க மாநிலத்தில் ராணுமோண்டால் என்ற பெண் அப்பகுதியில் இருக்கும் ரயில் நிலையம் மற்றும் சாலைகளில் பாட்டு பாடி பிச்சையெடுத்து வந்துள்ளார். இந்தநிலையில் அந்த பெண் சமீபத்தில் ரயில் நிலையத்தில் அமர்ந்து லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை மிகவும் சிறப்பாக பாடியுள்ளார்.
ரயில் நிலையத்தில் அமர்ந்து ராணுமோண்டால் பாடிக்கொண்டிருக்கும்பொழுது அந்த வழியாக வந்த நபர் அதனை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார். அவர் வெளியிட்ட வீடியோ தீயாய் பரவியது. இதனால் ராணுமோண்டால் ஒரே நாளில் பிரபலமானார்.
I give zero number to the make up artist....why do you want to change the color of somebody.....nature is the best makeup artist...you can only spoil it... poorthing...#RanuMandal https://t.co/7yJuNSJGof
— Dolli (@desh_bhkt) November 16, 2019
இந்த வீடியோவை பார்த்த பாடகரும், இசையமைப்பாளருமான ஷங்கர் மகாதேவன், அவர் இசையமைக்கும் பாலிவுட் படத்தில் ராணுமோண்டாலிற்கு ஒரு பாடல் பாட வாய்ப்பளித்துள்ளார்.
இதனையடுத்து பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஓன்று அவரை பேட்டி எடுத்ததோடு டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பாடி மேலும் புகழ் பெற்றார். இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஸ்மையா என்பவர் இவருக்கு சினிமாவில் பாட வாய்ப்பு கொடுத்தார். தற்போது வரை அவர் மூன்று பாடல்களை பாடியுள்ளார்.
ஆரம்பத்தில் ரயில் நிலையத்தில் அமர்ந்து ராணுமோண்டால் பாடிக்கொண்டிருக்கும்பொழுது அழுக்கு உடையில், தலை வாறாமல் பாடிக்கொண்டிருந்தார். அந்த ஒரு பாடலால் பிரபலமான அவர் தற்போது அழகிய உடையில், பல நகைகளை அணிந்துகொண்டு வேற லெவல் பாடகியாக மாறிவிட்டார்.