மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதற்கு காரணம் என்ன?
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் தீவிரமாக பரவி வந்த நிலையில் இந்தியாவில், சரியான நேரத்தில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டதால் கொரோனா பரவுதல் சற்று தடுக்கப்பட்டது. ஆனால் கடந்த ஒரு வார காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்தது.
கடந்த ஒரு வார காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த 10 இடங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. அந்த இடங்கள் மீது தனிகவனம் செலுத்தி வருகிறது.
இந்தியாவில் டெல்லி, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 2 இடங்களும், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடமும் இந்த பட்டியலில் உள்ளன. டெல்லி நிஜாமுதின் மேற்கு பகுதியில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் 15-ந் தேதிவரை நடந்த ஒரு மாநாட்டில் வெளிநாட்டினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் அதிக அளவில் நோய் பரவ அந்த மாநாடு முக்கிய காரணமாக அமைந்தது.
அந்த மாநாட்டில் பங்கேற்ற பலர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் 167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் பலியாகி உள்ளனர். திடீரென கொரோனா பரவுதல் அதிகரிப்பதன் காரணம் டெல்லியில் நிஜாமுதின் பகுதியில் நடந்த மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், நாடு முழுவதும் பயணம் செய்ததே என கூறப்படுகிறது.