மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதற்காகத்தான் இறந்தாரா? மர்மமான முறையில் இறந்த பெண்ணின் உள்ளாடைக்குள் மறைந்திருந்த காரணம், என்ன தெரியுமா ?
பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்த பெண்ணின் உள்ளாடைகுள் அமெரிக்க டாலர்கள்,தங்க நகை மற்றும் பக்கத்து வீட்டுக்காரரின் சாவி ஆகியவை இருந்தது பெரும் அதிர்ச்சியையும், சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அவினாஷ் அகர்வால் என்ற மருத்துவர் தனது மனைவி சோனா அகர்வாலுடன் வசித்து வந்தார் .அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் ஞாயிறு மாலை சோனா அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்பொழுது சோனா அகர்வாலின் உடலை பரிசோதனை செய்த போது அவரது உள்ளாடைக்குள் அமெரிக்க டாலர்கள், தங்க நகைகள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரின் சாவி ஆகியவை கண்டறிந்து எடுக்கப்பட்டது .
இந்நிலையில் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது விநாயகர் சதுர்த்தி பூஜைக்காக தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரசாந்த் என்பவரின் மனைவி சோனாவை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார் .மேலும் குடியிருப்பில் உள்ள மற்ற பெண்களும் பிரசாத் வீட்டிற்கு பூஜைக்காக வந்துள்ளனர்.
அப்போது எல்லோரும் ஹாலில் அமர்ந்த நிலையில் சோனா மட்டும் அங்கு பெட்ரூமில் உட்கார்ந்துள்ளார்.மேலும் அன்று பிரசாத்தின் வீட்டு சாவி காணாமல் போனதாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் ஒன்றாக மொட்டை மாடியில் கெட் டுகெதர் பார்ட்டியில் ஈடுபட்டுள்ளனர் .
அப்போது பிரசாத்தின் மாமனார் மட்டும் இடையே திடீரென வீட்டிற்கு திரும்பியுள்ளார் .அப்பொழுது சோனா பிரசாத்தின் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்துள்ளார். மேலும் பிரசாத்தின் மாமனாரை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர் பயந்து ஓடும்போது மாடியிலிருந்து கீழே விழுந்து விட்டார் .
இந்நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சோனா பிரசாத்தின் வீட்டில் இருந்து நகை மற்றும் அமெரிக்க டாலர்களை திருடி வந்திருக்கலாம் எனவும் அவரது மாமனாரை பார்த்ததும் பயந்து ஓடும்போது மாடியிலிருந்து தவறி விழுந்தது இருக்கலாம் அல்லது அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்