மீண்டும் கேரளாவிற்கு வெள்ள அபாயம்! வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட்



Red alert to kerala

2018 ஆகஸ்டில் பருவமழைக் காலத்தில் பெய்த அசாதாரணமான மழை காரணமாக கேரள மாநிலம் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டில் கேரளாவில் ஏற்பட்ட மோசமான வெள்ளம் இதுவாகும். இதில் 373 பேர் இறந்தனர். 314,391 பேர் இடம்பெயர்ந்தனர். மாநிலத்தின் 42 அணைகளில் 35 அணைகள் வரலாற்றில் முதன்முறையாக திறக்கப்பட்டன. 

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டின் தென் கிழக்கு பருவமழையின் இரண்டாவது சுற்று இன்று புதன்கிழமை துவங்குகிறது. இதனால் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது என கேரளா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

kerala flood

இதனால் வரும் ஜூலை 18ஆம் தேதி முதல் கேரளாவின் இடுக்கி, மலப்புரம், வயநாடு, கன்னூர், எர்ணாகுளம் மற்றும் திரிசூர் ஆகிய 6 மாவட்டங்களில் மிகவும் கனமழை பெய்யவுள்ளதாம். இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் அறிவிக்கப்பட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

kerala flood

இதனையடுத்து வெள்ள அபாயம், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பிரணயி விஜயன் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.