மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சவுக்கு சங்கர் விவகாரம்; பகிரங்க மன்னிப்பு கேட்ட ரெட்பிக்ஸ்.! விபரம் உள்ளே.!
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ரெட்பிக்ஸ் என்ற யூடியூப் பக்கத்தில், யூடியூபர் சவுக்கு சங்கர் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதனால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருத்தல், பெண்களை அவதூறாக பேசுதல் உட்பட பல்வேறு வழக்குகளின் கீழ் பதிவு செய்யப்பட்டு, பின் குண்டரிலும் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: திருமணமாகாத பெண் காவலரின் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? - பரபரப்பு புகார்.!
ரெட்பிக்ஸ் மன்னிப்பு கேட்டது
ரெட்பிக்ஸ் யூடியூப் தலத்தில் வெளியான விடீயோவின் பேரில், அதன் தலைமை ஆசிரியரும் கைது செய்யப்பட்டார். தற்போது இந்த விஷயம் தொடர்பாக ரெட்பிக்ஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்து பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக ரெட்பிக்ஸ் வெளியிட்டுள்ள மன்னிப்பு அறிக்கையில், "சர்ச்சைக்குரிய வீடியோவில் பேசியது எங்களின் கருத்து இல்லை. இதனால் காவல்துறையில் பணியாற்றி வரும் பெண்கள் வருத்தம் அடைந்ததால் நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். சர்ச்சைக்குரிய வீடியோ காவல்துறையின் விசாரணைக்காக தனிப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளது" என கூறியுள்ளது.
— Redpix (@redpixnews) May 15, 2024
இதையும் படிங்க: "கோவையில் சிறையில் என்னை கொல்லப்போறாங்க" - செய்தியாளர்களிடம் சவுக்கு சங்கர் அதிர்ச்சி தகவல்.!