மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆந்திரா அருகே பரபரப்பு.. சினிமா பாணியில் காவலர் மீது கார் ஏற்றி கொன்ற கடத்தல் கும்பல்!
ஆந்திர மாநிலத்தில் செம்மர கடத்தல் பிரிவு காவலரை கடத்தல் கும்பல் காரிய சி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் காலம் காலமாக காடுகளில் செம்மரங்களை வெட்டி கடத்துவது பெரும் பிரச்சினையாக உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த சில வருடங்களாக இந்த பிரச்சினை அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஆந்திரா காவல் துறை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு என புதிய பிரிவையே ஏற்படுத்தி கடத்தல் காரர்களை தீவிரமாக ஒடுக்கி வருகிறது.
இந்த நிலையில் ஆங்கில மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள செக் போஸ்டில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு காவலர் கணேஷ் என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது செம்மரக்கட்டைகளை காரில் கடத்தி வந்த கடத்தல் கும்பல் ஒன்று கணேஷ் மீது காரை ஏற்றிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காவலர் கணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தப்பியோடிய கடத்தல் கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.