தெருவோர கடையில் பாத்திரம் கழுவி, கிடைத்ததை சாப்பிட்டு வாழ்ந்த கோடீஸ்வரர் மகன்! காரணத்தை கேட்டா ஆடிப்போயிருவீங்க!!



richest young man live in street

குஜராத் மாநிலம் வடோதராவை சேர்ந்தவர் துவாரகேஷ் தக்கர். இவர்  கோடீஸ்வர் ஒருவரது மகன். 19 வயது நிறைந்த இவர் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தநிலையில் கடந்த மாதம் வீட்டிலிருந்து 2500 ரூபாயை எடுத்து கொண்டு வெளியேறியுள்ளார். இதனால் பெரும் கவலையடைந்த அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். 

இந்நிலையில் சமீபத்தில் சிம்லாவில் உள்ள பெரிய ஹோட்டல் ஒன்றில் துவாரகேஷ் வேலை கேட்டு சென்றுள்ளார். இந்நிலையில் துவாரகேஷின் தோற்றத்தை கண்டு சந்தேகமடைந்த ஹோட்டல் மேலாளர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் சிம்லாவிற்கு சுற்றுலா வந்த இரு குஜராத் போலீசார் இவரை அடையாளம் கண்டுள்ளனர். 

richest persion

பின்னர் துவாரகேஷிடம் விசாரணை மேற்கொண்டதில், வீட்டை விட்டு வெளியேறிய அவர் சாலையோர உணவு கடைகளில் பாத்திரம் கழுவும் வேலை செய்ததாகவும், அவர்கள் கொடுத்த உணவை சாப்பிட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு அவர் ஹோட்டலில் வேலை கேட்டு வந்துள்ளார்.

மேலும் துவாரகேசுக்கு படிப்பின் மீது விருப்பமில்லாததால், தனது திறமையை நிரூபிக்க நினைத்தே அவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சிம்லாவுக்கு விரைந்த அவர்கள் மகனை கண்டு கண்ணீர்விடுத்துள்ளனர்.