செல்போன், பணம் தர மறுத்ததால் இளைஞர் குத்திக்கொலை; ரிக்சா ஓட்டுனர் அதிர்ச்சி செயல்.!



Rickshaw driver killed a man new delhi

புது டெல்லியில் உள்ள சாக்தாரா, கோரக் பார்க் பகுதியில் 30 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், உயிரிழந்தவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும் அவர் விஜய் எனவும் அடையாளம் காணப்பட்டார். அங்குள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்த காவல்துறையினர், அவர் இறுதியாக ரிக்க்ஷா ஒன்றில் பயணம் செய்ததை உறுதி செய்தனர். மேலும் ஓட்டுனர் ஷேக்சாத் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். 

New Delhi

இந்த விசாரணையில், கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்திய ஓட்டுநர், தனது பயணியிடம் கத்தியை காட்டி பணம் மற்றும் செல்போனை கேட்டு மிரட்டி தாக்குதல் நடத்தி, அவரை கொலை செய்து அங்கிருந்து தப்பிசென்றது தெரியவந்தது.