பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
#Rishabh Pant Accident: ரிஷப் பண்ட் குணமாக 6 மாதங்கள் ஆகும்; மருத்துவரின் அறிவிப்பால் சோகத்தில் ரசிகர்கள்.!
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், நேற்று டெல்லியில் இருந்து உத்திரகாண்ட் மாநிலத்திற்கு செல்லும் வழியில், ரூர்கே நகரின் அருகில் தனது காரில் விபத்தை சந்தித்தார். இந்த விபத்தில் அவரின் கார் முற்றிலும் எரிந்து தீக்கு இரையானது.
ரிஷப் பண்ட் தற்போது சிகிச்சைக்காக டேராடூன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனது குடும்பத்தினரை சந்திக்க சென்றபோது கார் விபத்திற்குள்ளானது.
இந்த தகவல் ஊடகங்களில் செய்தியாக வெளியானதை தொடர்ந்து அவரின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அவரது கார் விபத்திற்குள்ளாகும் வீடியோ காட்சியும் வெளியாகின. விசாரணையில், அவர் காரில் பயணித்தபோது தூக்க கலக்கத்தில் விபத்து நடந்தது உறுதியானது.
இந்த நிலையில், அவருக்கு உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவற்றுக்கு மருத்துவர்கள் தேவையான சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் பூரணமாக சிகிச்சை பெற்று குணமடைய 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.