திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நள்ளிரவில் நிகழ்ந்த சோகம்... 20 அடி பாலத்திலிருந்து ரயில்வே பாதையில் பேருந்து விழுந்து விபத்து... 4 பேர் உயிரிழப்பு!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு ஹரித்வாரில் இருந்து சுமார் 70க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டுள்ளது. சரியாக பேருந்தானது தவுசா ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வளைவில் திரும்பும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
அதில் பேருந்தானது சுமார் 20 அடி உயர பாலத்திலிருந்து கீழே இருந்த ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட அதிகாரிகள், போலீசார், ரயில்வே பணியாளர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் விபத்தில் படுகாயமடைந்த 34 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேருந்தானது ரயில்வே தண்டவாளத்தில் விழுந்ததால் ரயில் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் கிரேன் மூலம் பேருந்தை அப்புறப் படுத்தியதை அடுத்து ரயில் சேவை சீரானது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.