#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தனது தங்கையின் திருமண புகைப்படத்தை வெளியிட்ட சானியா மிர்சா! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்.
பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. ஐதராபாத்தை சேர்ந்த இவர் ஏராளமான வெற்றிகளை குவித்து இந்தியாவிற்கு ஏராளமான பெருமையை சேர்த்துள்ளார்.அதனை தொடர்ந்து சானியா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதனை தொடர்ந்து சானியா பாகிஸ்தான் நாட்டிற்காக டென்னிஸ் விளையாட வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையிலும், அதனை நிராகரித்துவிட்டு இந்தியாவிற்காக மட்டும்தான் எப்பொழுது விளையாடுவேன் என இந்தியா சார்பாக பல போட்டிகளில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது சானியா மிர்சாவின் தங்கைக்கு திருமணம் மிகவும் கோலாகலமாக ஹைதராபாத்தில் நடந்துள்ளது. மேலும் சானியாவின் தங்கையை திருமணம் செய்து கொண்டவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முகமது அசாருதீன் மகனான ஆசாத். தற்போது அந்த அழகிய ஜோடியின் புகைப்படத்தை சானியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.