மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அருமையான க்ளிக்.! சூரியனை விழுங்கும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.! இணையத்தை கலக்கும் புகைப்படம்.!
கிரிக்கெட் உலகில் 30 ஆண்டுகளுக்கு மேல் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி பல போட்டிகளில் வெற்றிக்கு வழி வகுத்தவர் சச்சின் டெண்டுல்கர். மாஸ்டர் பிளாஸ்டராக வலம் வந்த அவர் சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் 100 சதங்கள் என மொத்தமாக 34,357 ரன்களை குவித்துள்ளார். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
மேலும் அவர் தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் 78 போட்டிகளில் விளையாடி 2334 ரன்கள் குவித்துள்ளார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் உள்ளார். அதுமட்டுமின்றி அவர் நாடாளுமன்ற சிறப்பு எம்.பியாகவும் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் கோல்ஃப் விளையாட்டிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர் அண்மையில் கோல்ப் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் புகைப்படங்களை தனது
சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், சூரியனை விழுங்குவது போல தத்ரூபமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்துள்ளார். அது வைரலாகி வருகிறது.