திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சந்தோஷமான செய்தி.. 100 நாள் வேலைத்திட்டம்.! ஊதியத்தை உயர்த்திய மத்திய அரசு.!
கடந்த 2006 ஆம் ஆண்டு கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. மக்களால் 100 நாள் வேலை என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தில் பதிவு செய்து இணைந்த மக்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு குறைந்தபட்ச ஊதியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பு பெற்று பலன் அடைந்துள்ளனர். இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை பார்த்து வருபவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியத்தை உயர்த்தி தற்போது மத்திய அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலைகளுக்கு வழங்கப்படும் ஊதியம் ரூ.294ஆக இருந்து ரூ.319ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், மற்ற மாநிலங்களுக்கும் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த முறை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.