தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ராஜிவ் காந்தி: 28 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சென்னையில் நடந்த பயங்கரம்!
ராஜீவ் காந்தி, இந்தியாவின் ஆறாவது பிரதமர் ஆவார். இவர் 21 மே 1991 அன்று தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஒரு குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அதில் 14 நபர்கள் கொல்லப்பட்டனர்.
1944 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகனாக பிறந்த ராஜிவ் காந்தி, 1984ல் தனது தாயார் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். இவர் இந்தியாவின் பிரதமராக 1984 முதல் 1989 வரை பதவியில் இருந்தார்.
இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981பெப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ராஜீவ் காந்தியின் படுகொலை விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. பின்னர், அவரது உண்மையான பெயர் காயத்ரி எனத் தெரியவந்தது.
1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி ராஜீவ் காந்தி சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு சென்னை வந்து, பின்னர் ஒரு வெள்ளை அம்பாசிடரில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சார இடங்களை பார்வையிட்டார். அப்போது தனது வண்டியை விட்டு வெளியே வந்து மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் ராஜிவ் காந்தி.
ராஜீவ் காந்தியை வரவேற்க வழியில், அவருக்கு பல நல்விரும்பிகள், காங்கிரஸ் கட்சித் தொழிலாளர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மாலை அணிவித்தனர். 22:21 மணிக்கு கொலையாளி, தானு, அவரை அணுகி வாழ்த்தினார். அவரது கால்களை தொட கீழே குனியும் போது தனது ஆடையின் அடியே வைத்திருந்த ஆர் டி எக்ஸ் (RDX) வெடிபொருளை வெடிக்கச் செய்தார் தானு. ராஜீவ் காந்தி மற்றும் 14 மற்றவர்களும் அந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் அங்கிருந்த ஒரு புகைப்படக்காரரின் புகைப்பட கருவியில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோரசம்பவம் நாடு முழுவதும் மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த பயங்கர தாக்குதல் சம்பவம் நடைபெற்று இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகிவிட்டன.