நடுரோட்டில் பிச்சையெடுத்த பெண்ணுக்கு அடித்த உச்சகட்ட அதிர்ஷ்டம்! ஒரே நாளில் வாழ்க்கையே தலைகீழாக மாறியது எப்படி தெரியுமா??



Sankar Mahadevan giving the chance to the woman who begged at the railway station

மேற்குவங்கத்தில் ராணுமோண்டால் என்ற பெண் அப்பகுதியில் இருக்கும் ரயில் நிலையம் மற்றும் சாலைகளில் பாட்டு பாடி பிச்சையெடுத்து வந்துள்ளார். இந்தநிலையில் அந்த பெண் சமீபத்தில் ரயில் நிலையத்தில் அமர்ந்து லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை மிகவும் சிறப்பாக பாடியுள்ளார்.

இந்தநிலையில், அவர் பாடிக்கொண்டிருக்கும்பொழுது அந்த வழியாக வந்த நபர் ராணுமோண்டால் படுவதை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார். அவர் வெளியிட்ட வீடியோ தீயாய் பரவியது. இதனால் ராணுமோண்டால் ஒரே நாளில் பிரபலமானார்.

இதனையடுத்து பாடகரும், இசையமைப்பாளருமான ஷங்கர் மகாதேவன், தான் இசையமைக்கும் பாலிவுட் படத்தில் ராணுமோண்டாலிற்கு ஒரு பாடல் பாட வாய்ப்பளித்துள்ளார். இதற்காக பிச்சையெடுத்து கொண்டிருந்த அவர் அழைத்துச் செல்லப்பட்டு, அழகு நிலையத்தில் வைத்து அவருடைய ஸ்டலையே அப்படியே மாற்றினர்.

இதைக் கண்ட இணையவாசிகள் சிலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சாலையோரம் பிச்சையெடுத்த பெண்மணிக்கு இப்படி ஒரு அதிர்ஷ்ட்டமா?? எனவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் ஒரு சில பாலிவுட் இசையமைப்பாளர்களும் அந்த பெண்ணுக்கு பாட வாய்ப்பு அளிப்பதாக வாக்கு கொடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ரயிலில் பிச்சை எடுப்பதற்காக பாடிக் கொண்டிருந்த ராணு மோண்டால் தற்போது தொழில்முறை பாடகியாகி உள்ளார் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.