மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குளத்தில் நீச்சல் பயிற்சி மேற்கொண்ட பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்.!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் அருகே உள்ள கோலியக்கோடு பகுதியை சேர்ந்தவர் தாராதாஸ். இவரது மனைவி பினு. இவர்களுடைய மகள் துருபிதா. துருபிதா போத்தன்கோட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இதில், துருபிதா தனது 4 வயது முதல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி குளத்தில் துருபிதா நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது மாணவிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.