பெப்பர் ஸ்பிரே வைத்து சிறுமி செய்த செயல்.! சக மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்.!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாரா பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று, மாணவிகளுக்கான தற்காப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அப்போது, பெப்பர் ஸ்பிரே அறிமுகம், பயன்பாடு, அவசியம் குறித்து பேசப்பட்டது. பெண்களின் தற்காப்புக்காக பிரபலமாக பயன்படுத்தப்படும் பெப்பர் ஸ்பிரேவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தற்காப்பு நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.
அப்போது, சிறுமி ஒருவர் பெப்பர் ஸ்பிரேவை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது, சக மாணவிகள் முன்னிலையில் வைத்து அதனை உபயோகித்தார். அப்போது, கூட்டமாக இருந்த மாணவிகளின் கண்களின் மீது பெப்பர் ஸ்பிரே விழுந்ததது. அப்போது, மாணவிகள் அலறினர். சிலர் மயங்கி விழுந்தனர். இதனால், 12 மாணவிகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகள் சிகிச்சை முடிந்தவுடன் வீடு திரும்பினார். இதனையடுத்து மாணவிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.