கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
தங்கள் உயிரைவிட, தேசிய கீதம் தான் எங்களுக்கு முக்கியம்! பள்ளி மாணவச்செல்வங்களின் வைரல் வீடியோ!
அடைமழையிலும் விடாமல் தங்களது தேசியகீதம் பாடலை முழுமையாக பாடிமுடித்து சுதந்திரத்தினத்தை கொண்டாடிய பள்ளிமாணவர்களின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடுமுழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களில் தேசியக்கொடியேற்றி கொண்டாடுவது வழக்கம். இந்திய மக்கள் அனைவருக்கும் தேசிய கோடி மீதும், தேசிய கீதத்தின் மீதும் அளவு கடந்த மரியாதை உள்ளது.
Rock solid next generation of India!
— BJP Karnataka ITCell (@BJPKarITCell) August 15, 2019
Independence day celebration at school in Sambar Tota in Mudipu Mangaluru. pic.twitter.com/jIVNVa1XgC
தமிழகத்தில் உள்ள அணைத்து திரையிறங்குகளிலும் படம் திரையிடுவதற்கு முன்பு, தேசிய கீதத்தை ஒளிபரப்பிய பிறகுதான் திரைப்படம் தொடங்கும். அப்போது அனைவரும் தேசியகீதத்திற்கு எழுந்து நின்று மரியாதை செய்வார்கள்.
அதேபோல தேசியகீதத்தை மாணவர்கள் உயிர்மூச்சாக நினைப்பார்கள். அந்தவகையில் கர்நாடக மாநிலம், மங்களூருவில் தேசியக்கொடி ஏற்றி, தேசிய கீதம் பாடியபோது கனமழை பெய்தது, ஆனாலும் அணைத்து மாணவச்செல்வங்களும் மழையை துளி அளவுகூட கண்டுகொள்ளாமல் தேசியகீதம் முடிந்த பிறகே பள்ளிக்கூடத்திற்குள் செல்கின்றனர். மாணவர்களின் இந்த தேசப்பற்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.