திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெண்களை ஆபாசமாக படம் பிடிக்க புதுச்சேரி லாட்ஜில் ரகசிய கேமரா... வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை.!
புதுச்சேரியில் உள்ள லாட்ஜில் பெண்களை ஆபாசமாக படம் பிடிக்க ரகசிய கேமரா வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக இளைஞர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி உழவன் கரையைச் சேர்ந்தவர் பிரியன்(22), இவர் தனது தோழியுடன் புதுச்சேரி 100 அடி ரோட்டில் உள்ள லாட்ஜிற்கு உறவினர்களை சந்திப்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது உறவினர்கள் தங்கி இருந்த அறையில் தொலைபேசியின் வயிறிணைப்பு ஒரு பெட்டியோடு இணைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து சந்தேகம் அடைந்த அவர் தனது செல்போனின் மூலம் ஆய்வு செய்தபோது ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த பெட்டியை திறந்த பிரியன் அதிலிருந்து ரகசிய கேமராவை கைப்பற்றினார். மேலும் இது தொடர்பாக லாட்ஜ் ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் மறுத்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை காட்டுமாறு முறையிட்ட போதும் அதற்கும் மறுப்பு தெரிவித்தவர்கள் அதனை அளிக்க முயன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளித்தார் பிரியன்.
இதனைத் தொடர்ந்து கிழக்கு எஸ்பி சுவாதி சிங் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் காவல்துறையினர் அந்த விடுதியில் சோதனை இட்டனர். பிரியன் அளித்த புகாரின் பேரில் ஹோட்டல் மேனேஜர் ஆனந்து (25) மற்றும் அபிரகாம் (22) ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்த போலீசார் தலைமறைவான இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.