மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி; கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக்கொலை..!!
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீரில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில்,
பாதுகாப்பு படையினருக்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர், காஷ்மீர் காவல்துறையினருடன் இணைந்து இன்று அதிகாலை தீவிர சோதனை நடத்தினர். கப்ரீன் பகுதியில் சோதனை நடத்திய போது அப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதிகளை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் தொடுத்தனர்.
இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். என்கவுண்டர் நடந்த பகுதியில் இன்னும் சில தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.