மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மணிப்பூர் கொடுமை: பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பாதுகாப்பு படை அதிகாரி!!
மணிப்பூர் என்றாலே வன்முறை என்னும் சொல் ஞாபகம் வரும் அளவிற்கு தற்போது அம்மாநிலத்தில் வன்முறை தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரங்களாக சமூக வலைத்தளத்தில் உலாவி கொண்டிருக்கும் வீடியோ- இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்திய காட்சி தான். இந்த அதிர்ச்சி அலை ஓய்வதற்கு முன்பே அடுத்தடுத்து பல அசம்பாவிதங்கள் மணிப்பூரில் நடந்து கொண்டே இருக்கிறது.
அதன் வரிசையில் மணிப்பூரில் உள்ள மளிகை கடையில் ஒரு பெண்ணிற்கு, எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த எல்லை பாதுகாப்பு படை வீரரை இடைக்கால பணிநீக்கம் செய்துள்ளதாக நேற்று ஒரு அதிகாரி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் ஜூலை 20ஆம் தேதி அன்று நடந்ததாக துணை ராணுவ படை நிர்வாகிக்கு புகார் வந்ததை தொடர்ந்து, அன்றே அந்த படை வீரரை சஸ்பெண்ட் செய்ததாக பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்துள்ளார்.