பரபரப்பு.. 24 ஆண்டுகளுக்குப் பிறகு கணவரின் இறுதி சடங்கிற்கு வந்த மனைவி.. ரகளையில் முடிந்த துக்க நிகழ்வு..!



Sensation.. Wife came to her husband's funeral after 24 years.. The mourning event ended in Raragi..!

புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் கே.ஆர் பாளையம் பகுதியில் வசித்து வந்தவர்கள் பொய்யாமொழி- சுமதி தம்பதியினர். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 24 வருடங்களுக்கு முன்பு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பொய்யாமொழி திடீரென்று நேற்று மரணம் அடைந்தார். இதனை அறிந்த அவரது மனைவி சுமதி தனது கணவரின் துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கே.ஆர் பாளையம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த பொய்யாமொழியின் உறவினர்கள் இத்தனை ஆண்டுகள் ஏன் வரவில்லை? தற்போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி சடங்கிற்கு மட்டும் ஏன் வந்தாய்? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Husband funeral

இதனையடுத்து ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றவே இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பாக மாறி உள்ளது. இந்த கைக்கலப்பில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அங்கிருந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் சுமதி, தனசேகரன், ஏழுமலை ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்த வீடியோ பதிவானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.