மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரபரப்பு.. கணவனை தேடிச் சென்ற இளம் பெண் பலாத்காரம்.. 6 பேர் கொண்ட கும்பல் கைது.!
பெங்களூரில் கோரகுண்டேபாளையாவில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வீட்டு வேலை செய்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு சித்தப்புராவை சேர்ந்த மஞ்சுநாத் என்பவருடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திருமணம் முடிந்த நிலையில் தம்பதியினர் இருவரும் பெங்களூருவில் வசித்து வந்துள்ளனர். மேலும் கடந்த சில தினங்களாகவே தம்பதிகளுக்குள் சிறு சிறு சண்டைகள் இருந்து வந்துள்ளது. இதனால் கோபமடைந்த இளம்பெண்ணின் கணவர் கோபித்துக் கொண்டு தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து கோபித்துக் கொண்டு சென்ற தனது கணவரை தேடி கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த இளம்பெண் இரவு கங்காவதி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அவரை காண்பதற்காக அவரது கணவர் மஞ்சுநாத்தம் அங்கு வந்த நிலையில் மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அங்கிருந்த 6 பேர் கொண்ட வாலிப கும்பல் ஒன்று அவர்களிடம் சென்று வம்பு செய்துள்ளனர். மேலும் அந்த வாலிபர்கள் இளம்ணரபெண்ணின் கையைப் பிடித்து இழுத்து தகாதவாறு நடக்க முயற்சி செய்ததோடு மட்டுமல்லாமல் தடுக்க வந்த அவரது கணவர் மஞ்சுநாத்தையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் அங்கிருந்து தப்பி சென்று அருகில் இருந்த பூங்காவில் ஓடி ஒளிந்து கொண்டார். இருப்பினும் விடாது துரத்திய அந்த இளைஞர்களில் ஒருவர் அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து தம்பதியினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த ஆறு இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.