மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆம் ஆத்மி வெற்றியை பாராட்டிய ப.சிதம்பரம்! காங்கிரஸ் கட்சிகளை மூடி விடலாம்! பிரணாப் முகர்ஜியின் மகள் பதிலடி!
நமது தோல்வி பற்றி கவலை கொள்ளாமல் ஆம் ஆத்மி வெற்றியை ஏன் கொண்டாட வேண்டும் என ப. சிதம்பரத்திற்கு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 8ஆம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி வேட்பாளர்களே முன்னணியில் இருந்தனர். இறுதியில் அந்த கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது.
இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு 8 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. படுமோசமான தோல்வியை காங்கிரஸ் கட்சி சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் தோல்வி குறித்து அக்கட்சியின் முத்த தலைவர்கள் பலவிதமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில், ‘‘ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று உள்ளது. ஏமாற்று வேலை மற்றும் வெற்று கோஷம் தோல்வி அடைந்து உள்ளது. சூழ்ச்சி மற்றும் வகுப்புவாத அரசியல் திட்டங்களை தோற்கடித்து உள்ளனர்” என கருத்து தெரிவித்திருந்தார்.
அவரது கருத்திற்கு பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியில் தோல்வி பற்றி கவலை கொள்ளாமல் ஆம் ஆத்மி வெற்றியை கொண்டாடுவதற்கு பதிலாக, மாநில காங்கிரஸ் கமிட்டிகளை கலைத்துவிடலாம் என்று, ப. சிதம்பரத்திற்கு பிரணாப் முகர்ஜியின் மகள் பதிலடி தந்துள்ளார்.