மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதலில் உங்க மனைவியின் புடவைகளை எரிங்க.! கொந்தளித்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா.! ஏன்? என்ன காரணம்??
இந்தியாவிற்கும், வங்காள தேசத்திற்கும் இடையே நல்ல நட்புரிமை இருக்கும் பட்சத்தில் ஏராளமான இந்திய உற்பத்தி பொருட்கள் வங்காள தேசத்தில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வங்காள தேசத்தில் எதிர்கட்சியாக இருக்கும் பங்களாதேஷ் நேஷனலிஸ்ட் பார்ட்டி இந்தியாவையும், இந்திய பொருட்களையும் புறக்கணிக்க வேண்டுமென தொடர்ந்து கோஷம் எழுப்பி வருகிறது.மேலும், சமூக வலைத்தளங்களில் #BoycottIndia என்கிற ஹேஷ்டாக்கையும் பரப்பி வருகிறது.
இதற்கு வங்காளதேச பிரதமர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வங்காள தேசத்தில் அவாமி லீக் கட்சியின் ஷேக் ஹசினா என்பவர் பிரதமராக உள்ளார். இவர் ஐந்தாவது முறையாக பிரதமராகியுள்ளார். மேலும் நீண்ட காலம் ஆட்சி செய்யும் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர். இவர் இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினரின் பிரச்சாரத்திற்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது, இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என கூறுபவர்கள் இந்திய மசாலா பொருட்கள் இல்லாமல் சாப்பிட முடியுமா?. மேலும் Boycott India என கூறுபவர்கள் மனைவிகளிடம் இந்திய புடவைகள் என கேட்க வேண்டும். ஒருவேளை அவர்களிடம் இந்திய புடவைகள் இருந்தால் அதனை வாங்கி முதலில் எரித்துவிடுங்கள் பார்ப்போம் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.