மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுத்த விவகாரம்…நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல்..!
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டிய ஞானவாபி மசூதியில் நீதிமன்ற உத்தரவுபடி வீடியோ பதிவுடன் கூடிய கள ஆய்வு மூன்று நாட்களாக நடைபெற்றது.
மூன்று நாட்களாக நடைபெற்ற கள ஆய்வு இன்று நிறைவு பெற்றுள்ள நிலையில் மசூதி வளாகத்தில் உள்ள குளத்தில் 8 இன்ச் விட்டமும் 12 அடி உயரமும் கொண்ட சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அறிக்கை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நீதிமன்றத்தில் இன்று நடைபெறக்கூடிய விசாரணை பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வு செய்ய தடை கோரிய வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.