திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஷாக்.. தந்தை மற்றும் 3 மாத குழந்தையின் உயிரைப் பறித்த ஹுட்டர்.. தாய் கவலைக்கிடம்.!
ராஜஸ்தான் மாநிலம் திஜாரா மாவட்டத்தில் வசித்து வருபவர் தீபக். இவர் சம்பவத்தன்று தனது மனைவி மற்றும் மூன்று மாத குழந்தையுடன் படுக்கை அறையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது இவரது வீட்டில் இருந்த ஹீட்டர் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்த தீயானது மளமளவென படுக்கை அறை முழுவதும் பரவியது. இதனால் மெத்தை முழுவதும் எரிய தொடங்கிய நிலையில் அதில் உறங்கிக் கொண்டிருந்த தீபக் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் தீயில் சிக்கிக் கொண்டு கத்தி கூச்சலிட்டு உள்ளனர்.
இந்நிலையில் இவர்களது அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைத்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தீபக் மற்றும் அவரது 3 மாத குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அவரது மனைவி தீக்காயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.