ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அதிர்ச்சி... பலி ஆடு தன்னை பலி கொடுத்தவரை காவு வாங்கிய சோகம்... நடந்தது என்ன.?
சத்தீஸ்கர் மாநிலத்தில் பலி கொடுத்த ஆட்டை சாப்பிட்ட நபர் விசித்திரமான முறையில் இறந்துள்ள சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
சத்தீஸ்கர் மாநிலம் சூராஜ்பூர் மாவட்டம் மதன் போர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாகர் சாய்(50). கடவுள் நம்பிக்கை கொண்டவரான இவர் கோபாதாம் கோவிலுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். கடந்த முறை கோவிலுக்கு சென்று வந்த போது தனது நோக்கம் நிறைவேறினால் ஆடு பலி கொடுப்பதாக வேண்டி இருக்கிறார்.
அவரது வேண்டுதல் நிறைவேறியதை தொடர்ந்து தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கோபாலாம் கோவிலுக்கு சென்ற பாகர் சாய் பூஜை மற்றும் வேண்டுதல்கள் முடிந்த பின்னர் ஆட்டை அறுத்து பலிகிட்டு இருக்கிறார். பின்னர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் அமர்ந்து சாப்பிட துவங்கி இருக்கின்றனர்.
அவர்களுடன் அமர்ந்து பாகருசாயம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கறி குழம்பில் கிடந்த ஆட்டின் கண் அவரது தொண்டையில் சிக்கி இருக்கிறது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் தீவிர ரசிகிச்சையளித்தும் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் சாய். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.