மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மணிப்பூரில் மீண்டும் அதிர்ச்சி... மத்திய அமைச்சரின் வீட்டை தாக்கிய போராட்டக்காரர்கள்... பாதுகாப்பு அதிகரிப்பு.!
மணிப்பூர் மாநிலத்தில் மத்திய அமைச்சர் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்பாக அந்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே பழங்குடியின குழுக்களுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த மாநிலமே பற்றி எரிகிறது. தினமும் ஒரு கலவரம் படுகொலை சம்பவங்கள் என நாட்டையே உலுக்கி இருக்கிறது.
இந்நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க கோரி மணிப்பூரைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சரான ரஞ்சன் சிங் மீதும் அவரது வீட்டின் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தி இருக்கின்றனர் போராட்டக்காரர்கள்.
இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னரும் மத்திய அமைச்சரின் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.