ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
மயக்க மருந்து கொடுத்து... 17 வயது மாணவிகள் பாலியல் பலாத்காரம் ... விசாரணையில் வெளியான அதிர்ச்சி உண்மை!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மயக்க மருந்து கொடுத்து பிளஸ் டூ மாணவிகள் மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிளஸ் டூ படிக்கும் 17 வயதுடைய மூன்று மாணவிகள் அங்குள்ள மெடிக்கல் காலேஜ் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு மற்றும் ஜிஷ்ணு ஆகிய இரண்டு பேருடன் நட்பாக பழகி வந்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை நான்காம் தேதி நண்பரின் வீட்டிற்கு அந்த மாணவிகளை அழைத்துச் சென்று இருக்கின்றனர்.
அங்கு வைத்து மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து அந்த மாணவிகளை அவர்களது இரண்டு நண்பர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்களது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை இரண்டு இளைஞர்களை கைது செய்து இருக்கிறது.
மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மயக்கம் மருந்து கொடுத்து மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். நண்பர்களே தங்களுடன் பழகிய மூன்று மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது