ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அதிர்ச்சி.. அண்ணியுடன் ஏற்பட்ட தகாத உறவு.. கண்டித்த தங்கை.. கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த அண்ணன்.. பரபரப்பு சம்பவம்..!
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு அவரது அண்ணன் மனைவியுடன் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கமானது அவரது தங்கைக்கு தெரிய வரவே அண்ணனை கண்டித்துள்ளார். மேலும் இதனை கைவிடாவிட்டால் வீட்டில் உள்ள அனைவரிடமும் இதைப் பற்றி கூறிவிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அந்த இளம் பெண் அங்கிருந்த காட்டிற்கு சீலி இலை எடுப்பதற்காக சென்றுள்ளார். இதனை அறிந்த அவரது அண்ணன் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு அங்கு சென்று அந்த காட்டில் மது அருந்தியுள்ளார். பின்னர் போதை தலைக்கேரிய நிலையில் தங்கை என்றும் பாராமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலில் பலாத்காரம் செய்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் கோடாரியால் அவரது தங்கையை தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் ஒன்றும் நடக்காதது போல் தனது தங்கையை காணவில்லை என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு காட்டில் ஒரு இளம் பெண்ணின் சடலம் கிடப்பதாக தகவல் வந்துள்ளது.
மேலும் அந்த சடலமானது காணாமல் போன இளம் பெண்ணின் உடல் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடிவந்தனர். அப்போது அந்த இளம் பெண்ணின் அண்ணன் மீது சந்தேகம் வந்ததால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளம் பெண்ணின் அண்ணன் தனது தங்கையை கூட்டுப் பாலில் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனது தங்கையை அண்ணனே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.