மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மணிப்பூரில் அதிர்ச்சி சம்பவம்... சட்டவிரோதமாக அகதிகள் குடியேறியது எப்படி.? ரைபில் படையினருக்கு மணிப்பூர் அரசு கேள்வி.!
மணிப்பூர் மாநிலத்தில் ஒரு பக்கம் கலவரம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு புறம் என்மார் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக அகதிகள் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுவதாக மணிப்பூர் அரசு குற்றச்சாட்டு இருக்கிறது .
மணிப்பூர் மாநிலத்தில் பள்ளத்தாக்கு பகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் மெயிடீஸ் பழங்குடியின மக்களுக்கும் மலைப்பகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் குக்கி இன மக்களுக்கும் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இன கலவரம் நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஜூலை 22 மற்றும் 23 ஆகிய இரண்டு குறிப்பிட்ட நாட்களில் மற்றும் மியன்மாரில் இருந்து 718 அகதிகள் இந்தியாவிற்குள் எந்த வித ஆவணமுமின்றி அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இது தொடர்பாக அசாம் ரைபிள் படையினரிடம் மணிப்பூர் அரசு விளக்கம் கேட்டிருக்கிறது. அதாவது 31 குழந்தைகள் 208 பெண்கள் உட்பட 718 மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் மணிப்பூரின் சாண்டல் மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.