மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி சம்பவம்!! அடிப்பம்பில் மோதிய பைக்.. வயிற்றை கிழித்துக் கொண்டு உள்ளே சென்ற கைப்பிடி.. பதற வைக்கும் காட்சிகள்..!
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கனிகிரி இந்திரா காலனியில் வசித்து வருபவர் நாகராஜ். இவர் நேற்று வேலை முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவரது இருசக்கர வாகனமானது சாலையில் ஓரமாக இருந்த அடிபம்பின் மீது வேகமாக மோதியது.
இந்த சம்பவத்தில் அடிப்பம்பின் கைப்பிடி நாகராஜின் வயிற்றை கிழித்துக்கொண்டு உள்ளே சென்றது. இதனையடுத்து வலியால் துடிதுடித்த நாகராஜனை அங்கிருந்தவர்களின் உதவியுடன் கட்டரைக் கொண்டு அடிப்பம்பின் கைப்பிடியை வெட்டி மீட்டுள்ளனர். பின்பு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நாகராஜனுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் சிக்கிக்கொண்டிருந்த கைப்பிடியின் துருப்பிடித்த பாகங்களை அகற்றியுள்ளனர். மேலும் நாகராஜன் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை பெற்ற வருவதாக மருத்துவர்கள கூறியுள்ளனர்.