மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி... 40 பேரை கடித்து குதறிய சிறுமி பரிதாப பலி... பயத்தில் உறைந்து போயிருக்கும் கிராம மக்கள்.!
உத்திரபிரதேச மாநிலத்தைச் சார்ந்த இரண்டரை வயது சிறுமி நாய் கடித்து இறப்பதற்கு முன் 40 பேரை கடித்த சம்பவம் அங்குள்ள கிராமத்தில் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் மக்கள் பயத்தில் உறைந்து போய் உள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தின் ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அங்கிருந்த வேட்டைக்காரரிடம் இருந்து மருந்து வாங்கி கொடுத்துள்ளனர். இதனால் சிறுமியின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து ரேபிஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்.
மேலும் சிறுமி அந்த கிராமத்தில் உள்ள 40 பேரை கடித்தும் நகங்களால் பரண்டியும் வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியை கடித்த நாய் திடீரென இறந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனால் அந்த சிறுமியால் கடிக்கப்பட்ட நாற்பது பேருக்கும் அந்த கிராம மக்களுக்கும் ரேபிஸ் தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அரசு மருத்துவமனையில் ரேபிஸ் தடுப்பூசிகள் அதிக அளவில் இருப்பதாகவும் அதனால் பொதுமக்கள் வீதி அடைய வேண்டாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.