திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஷாக்..5 ஆண்டுகள் தொடர் வயிற்று வலியால் அவதியுற்ற இளைஞர்.. எக்ஸ்ரேவில் உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
குஜராத் மாநிலம் பருச் மாவட்டத்தில் உள்ள அங்கலேஸ்வர் பகுதியில் வசித்து வருபவர் அதுல்கிரி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது அங்கு அவருக்கு சரிவர பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமல் மருந்து மாத்திரைகள் மட்டும் கொடுக்கப்பட்டு டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் அவருக்கு அவ்வப்போது வயிற்று வலி ஏற்படும்போதெல்லாம் இந்த மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மிகுந்த வயிற்று வலியால் அவதியுற்ற அதுல்கிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அங்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்களிடம் தீராத வயிற்று வலியினால் அவதியுருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுக்குமாறு கூறியுள்ளனர்.
இதனைதொடர்ந்து அதுல்கிரி எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது அவரது வயிற்றுப் பகுதியில் கத்தி ஒன்று இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதுல்கிரியை மேல் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.