#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
லாக்டவுனில் ஷட்டரை சாத்திக்கொண்டு கடைக்காரர் செய்த காரியம்! அதிரடியாக போலீசார் வைத்த ஆப்பு! வைரலாகும் வீடியோ!!
தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக பெருமளவில் அதிகரித்து வருகிறது. மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையால் மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்றவை ஏற்பட்டு பெரும் அவதி நிலவி வருகிறது.
இந்த நிலையில் நாடு முழுவதும் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மத்திய பிரதேசத்தின் தாத்தியா பகுதியில் ஒரு கடையில், திருமணத்திற்காக துணி வாங்க வந்த வந்தவர்களுக்கு,
ஷட்டரை சாத்திவைத்துக்கொண்டு வியாபாரம் செய்துள்ளனர்.
शादी के सीज़न में ऐसे छिप छिप कर ख़रीदारी हो रही है और पुलिस भी ऐसे लोगों को तलाश कर धुनाई कर रही है, ये विडीओ दतिया का है @Anurag_Dwary @Abhinav_Pan @ManojSharmaBpl @DGP_MP pic.twitter.com/DlfPIovICa
— Brajesh Rajput (@brajeshabpnews) May 9, 2021
இதை அறிந்து அங்கு விரைந்த போலீசார்கள் ஷட்டரை திறந்து கடைக்காரரை வெளியே இழுத்துச் செல்கின்றனர். மேலும் துணி வாங்க வந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் போலீசாரை பார்த்ததும் தலைதெறிக்க ஓடியுள்ளனர். இதற்கிடையில் போலிசாரிடம் கடைக்காரர்கள் விட்டு விடுமாறு கெஞ்சியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.