மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தியா என்றாலே சிங்கப்பூருக்கு இளகிய மனசு தான்.! கொரோனாவுக்கு எதிரான போருக்கு உதவிக்கரம்.!
சிங்கப்பூரில் இருந்து 4 டேங்க் ஆக்சிஜனுடன் இந்திய விமானப் படை விமானம் நேற்று இந்தியா வந்து சேர்ந்தது.
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. இந்தியாவில் அதிகப்படியானோர் கொரோனாவால் பாதிப்படைந்து வருவதால் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு கடந்த சில நாட்களாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேவையுள்ள இடங்களுக்கு மருத்துவப் பணியாளர்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை வான்வழியே விரைவாக கொண்டுசெல்ல இந்திய விமானப்படை முன்வந்தது.
இந்தியாவில் ஆக்ஸிஜனுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் பலரும் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பல மருத்துவமனைகள் நோயாளிகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனையடுத்து இந்திய விமானப் படையின் சி-17 ரக விமானம் நேற்று அதிகாலையில் ஹிண்டன் விமான தளத்தில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் சென்றது. அங்கிருந்து 4 ஆக்சிஜன் டேங்கர்களை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை மேற்கு வங்கத்தின் பனகர் விமானப் படை தளத்தில் தரையிறங்கியது.
மேலும், சிங்கப்பூர் தவிர ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தும் ஆக்சிஜன் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் நாங்கள் இந்தியாவுடன் இணைந்திருக்கிறோம் என புதுடெல்லி, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள சிங்கப்பூர் தூதரகக் கிளைகள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளன.