மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 சகோதரிகள் கூட்டு பலாத்காரம்.. 10 பேர் கைது.!
ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியில் பங்கேற்றே திரும்பிய 2 சகோதரிகளை 10 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த இரண்டு சகோதரிகள் ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போதே அவர்களை வழிமறித்த கும்பல் இரண்டு சகோதரிகளையும் கடத்தி சென்றது.
அங்கு யாரும் இல்லாத இடத்தில் வைத்து 10 பேர் கொண்ட மர்ம கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது. அதன் பின்னர் இரு சகோதரிகளையும் அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அதன் பின்னர் மயக்கம் தெளிந்து சகோதரிகள் வீட்டிற்கு வந்து தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.