அடேங்கப்பா இந்த வயசுலேயே இப்படியொரு பக்தியா? பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்த அசத்தல் வீடியோ



Small kid as smart priest in temple

தற்காலத்தில் சிறுவர்கள் அனைவரும் பெரியவர்களையே மிஞ்சும் அளவிற்கு ஏகப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு விளையாட்டு அறிவியல் என பல துறைகளிலும் சிறுவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில் குட்டி சிறுவன் ஒருவன் பெரிய கோவில் பூசாரிகளையே மிஞ்சும் அளவிற்கு மிகவும் அசத்தலாக மந்திரம் கூறி பூஜை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில் சிறுவன் மிகவும் முறையாக மந்திரம் கூறி கடவுளுக்கு பூஜை செய்கிறார் பின்னர் பெரியவர்களைப் போலவே ஆரத்தி எடுத்து அனைத்து தெய்வங்களுக்கும் காண்பித்து பின்னர் பக்தர்களுக்கும் கொடுக்கிறார். 

 அதுமட்டுமின்றி பூசாரிகளை போலவே தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கியுள்ளார். இவ்வாறு முறையாக மிக நேர்த்தியாக சிறுவன் ஒருவன் பூஜை செய்யும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் பெருமளவில் ரசிக்க வைத்துள்ளது.