மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீனுக்கு விரிச்ச வலையில் 7 அடி நீள கொடிய விஷப்பாம்பு.! ஷாக் வீடியோ.!!
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கடந்தவாரம் தருமபுரி மாவட்டம் கோடுஹள்ளி கிராமத்தில் ஓடையில் மீன் பிடிக்க இளைஞர்கள் விரித்த வலையில் மலைப்பாம்பு சிக்கியது. 7 அடி நீள மலைப்பாம்பை இளைஞர்கள் மீட்டு வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.
அதேபோல் ஒடிசா மாநிலத்தின் மங்கல்பூரில் உள்ள ஒரு நெல் வயலில் மீன்பிடிப்பதற்காக வலை வைக்கபட்டிருந்தது. அங்கு ஒரு விவசாயி வந்து பார்த்த போது கொடிய விஷ பாம்பு ஒன்று வலைக்குள் வந்து சிக்கி கொண்டிருந்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக பாம்பு பிடிக்கும் குழுவினருக்கு தகவல் கொடுக்கபட்டத்து. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் வலையில் சிக்கிய பாம்பை பிடித்தனர். பின்னர் வலையில் இருந்து பாம்பு வெளியில் எடுக்கப்பட்டு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.