மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சரக்கடிக்க பணம் தராததால் தந்தையை கல்லால் அடித்து கொலை செய்த மகன்.!
சரக்கடிக்க பணம் தராததால் தந்தையை மகன் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் மாவட்டம் திபால்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பாபு சவுத்ரி (வயது 50). இவரது மகன் சோகன் (வயது 25) மது போதைக்கு அடிமையான மகன் தனது தந்தையுடன் சேர்ந்து வயலில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வயலில் வேலை முடிந்த பின் மகன் தனது தந்தையிடம் செலவிற்கு 2000 ரூபாய் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தந்தை தனது மகனிடம் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த மகன் தனது தந்தையை கீழே தள்ளிவிட்டு அருகில் இருந்த கல்லால் கொடூரமாக தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் தந்தை பாபு சவுத்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் பாபு சவுத்ரி உடலை கைப்பற்றி பெரிதாக பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.