திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெற்ற தாயை துரத்தி, துரத்தி அடிக்கும் கொடூர மகன்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!
நடு ரோட்டில் பெற்ற தாயை அவரது மகன் கொடூரமாக தாக்கும் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள புல்ந்த்ஷாஹரி பகுதியில் இளைஞர் ஒருவர் மரக்கட்டையை கையில் எடுத்துக்கொண்டு, தனது தாயை துரத்தி, துரத்தி தாக்கி வருகிறார். இதனால், அச்சமடைந்த அந்த பெண் கத்திக் கொண்டு கோவிலை சுற்றி வருவது போல அங்குள்ள வீடுகளை சுற்றி வருகிறார்.
ஆனாலும், அந்த பெண்ணின் மகன் விடாமல் துரத்தி தாக்குகிறார். இதனையடுத்து பயந்து போன அந்த பெண் அருகில் உள்ள கோயிலுக்குள் நுழைய முயன்ற போது, அந்த இளைஞர் தாயாரை மறித்து கொடூரமாக தாக்கியுள்ளார்.
बुलन्दशहर : कलयुगी बेटे ने विधवा मां को पीटा
— News1Indiatweet (@News1IndiaTweet) April 2, 2024
मंदिर के सामने मां को डंडे से पीटा
बेटे की पीटाई के डर से दौड़ती रही बुजुर्ग मां
बेरहम बेटे को नहीं आया बुजुर्ग मां पर रहम
आरोपी को भीड़ ने पकड़कर पुलिस को सौंपा
पुलिस ने वायरल वीडियो को देखा
कलयुगी बेटे के खिलाफ दर्ज की एफआईआर… pic.twitter.com/oIRAYZtFrx
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அந்த இளைஞரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். இதன் பின்னர் அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.