மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடி போதையில் இருந்த தந்தை! தாயை காப்பாற்ற ஓடி வந்த மகன் பரிதாப பலி!
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பலுசேரி அருகே கினலூரை சேர்ந்தவர் வேணு. இவருக்கு மினி என்ற பெண்ணுடன் திருமணமாகி, இந்த தம்பதிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருந்துள்ளனர். வேணு மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு வேணு அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்து, அவரது மனைவி மினியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தூங்கிக் கொண்டிருந்த வேணுவின் மகன் பெற்றோர்களின் சண்டையை நிறுத்துவதற்காகவும், தனது அம்மாவை அப்பாவிடம் இருந்து காப்பாற்றவும் எழுந்துவந்துள்ளான்.
அப்போது தனது அப்பாவிடம் சண்டை போடாதீர்கள் என கூறி தடுத்துள்ளான். ஆனால் போதையில் இருந்த வேணு, அவரின் மனைவி மற்றும் மகனை ஆத்திரத்தில் கீழே தள்ளியுள்ளார். இதில் வேணுவின் மகன் தலையில் பலத்த காயம் அடைந்து, கீழே மயங்கியுள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு காயமடைந்த வேணுவின் மகனை கொண்டு சென்றனர். ஆனால் அவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை, தந்தையின் போதையில் அம்மாவிற்கு எதாவது ஆகிவிடுமே என நினைத்து காப்பாற்ற முயன்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வேணு மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.