சொத்துக்காக கூலிப்படை மூலம் தந்தை படுகொலை.. மாற்றுத்திறனாளி மகன் கைது!



Son killed father for assets in Karnataka

கர்நாடகா மாநிலத்தில் சொத்துக்காக தந்தையை கூலிப்படை மூலம் மகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பாகல்கோட் திம்மாபுரா பகுதியில் வசித்து வருபவர் சன்னப்பா. இவர் கடந்த ஜனவரி 25ஆம் தேதி ராம்புரா ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் சன்னப்பாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Crime

இதனிடையே இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் பிரேத பரிசோதனையில் சன்னப்பா அரிவாளால் வெட்டியும், தலையில் கல்லை போட்டும் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து தீவிர விசாரணை நடத்தியதில் அவருடைய மாற்றுத்திறனாளி மகன், மருமகள் மற்றும் உறவினர் ரமேஷ் மூவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். அதற்காக கூலிப்படைக்கு மூன்று லட்சம் ரூபாய் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.

Crime

இதனையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சன்னப்பா பெயரில் 37 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், அந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்றி தரும்படி மகன் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு தந்தை மறுத்துவள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மகன், மருமகள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து இவரை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக கூறியுள்ளனர். சொத்துக்காக தந்தையை கூலிப்படை வைத்து மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.