#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சாப்பிட அழைத்த தாயை கத்தியால் குத்திக் கொன்ற மகன்.! நடந்தது என்ன?? பகீர் சம்பவம்!!
கேரளா, திருச்சூர் மாவட்டம் வெளியேத்து பகுதியில் வசித்து வந்தவர் 52 வயது நிறைந்த ஷைலஜா. இவரது மகன் ஆதில். 27 வயது நிறைந்த அவர் மனநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் ஆதில் அவ்வப்போது தனது தாயாருடன் சண்டை போட்டு வந்துள்ளார்.
கத்தியால் குத்தி தாய் கொலை
நேற்று சைலஜா மகன் ஆதிலை தொடர்ந்து சாப்பிட அழைத்துள்ளார். இந்நிலையில் திடீரென ஆத்திரமடைந்த அவர் அருகில் இருந்த கத்தி ஒன்றை எடுத்து தாய் சைலஜாவை சரமாரியாக குத்தி தாக்கியுள்ளார். தொடர்ந்து அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சைலஜாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க: அழுதுகொண்டே இருந்த குழந்தை; பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொன்று தாயும் பலி.. சிவகங்கையில் அதிர்ச்சி.!
மகன் கைது
ஆனால் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தாயை குத்தி கொன்றது தெரியவந்த நிலையில், அவரை கைது செய்துள்ளனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டேய் படிடா... அறிவுரை கூறிய அம்மா, தம்பி கழுத்தறுத்து கொலை.. அமைதியாக இருந்து அதிர்ச்சி தந்த மூத்த மகன்.!