மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏய் பணம் தர முடியுமா முடியாதா... போதைப் பொருள் வாங்க பணம் தர மறுத்த தந்தை... ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரம்!!
வடமேற்கு டெல்லியின் சுபாஷ் பிளேஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். கூலி வேலை செய்து வரும் சுரேஷ்க்கு, அஜய் என்ற மகன் உள்ளார். அஜய் போதைக்கு அடிமையானவர். இந்நிலையில் ஒரு நாள் அஜய் தனது தந்தையிடம் போதை பொருள் வாங்க வேண்டும் என கூறி பணம் கேட்டுள்ளார்.
அதற்கு சுரேஷ் தரமுடியாது என கூறி கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜய் பெற்ற தந்தை என்று கூட பாராமல் எனக்கா பணம் தர மாட்டேங்குற என கூறி கடுமையாக தாக்கியுள்ளார். சுரேஷை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.