"ஆண்களை போலவே பெண்களும் மது அருந்த உரிமை உண்டு" - பெண்களை கேலி செய்த டைரக்டருக்கு பாடகி பதிலடி!



sona-mahotrba-tweets-for-girls-buying-alchohol

கர்நாடகாவில் பெண்கள் மது வாங்க வரிசையில் நிற்பதை கேலி செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட டைரக்டர் ராம்கோபால் வர்மாவிற்கு பிரபல இந்தி பாடகி சோனா மொகப்த்ரா பதிலடி கொடுத்துள்ளார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. 

ஆனால் தற்போது ஒரு சில மாநிலங்கள் மதுக்கடைகளை திறந்துள்ளன. இதில் கர்நாடகாவும் ஒன்று. மதுக்கடைகளை திறந்த முதல் நாளே கர்நாடகாவின் சில இடங்களில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.

wine shop

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து “மதுபான கடைகள் முன்னால் யார் நிற்கிறார்கள் என்று பாருங்கள். குடிகார ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று பேசி வருகிறோம்” என்று கேலி செய்யும் விதமாக டைரக்டர் ராம்கோபால் வர்மா பதிவிட்டார்.

தற்போது அவரின் பதிவிற்கு பதிலடி கொடுத்துள்ள பிரபல இந்தி பாடகி சோனா மொகப்த்ரா, "ஆண்களை போலவே பெண்களுக்கும் மதுபானம் வாங்குவதற்கும், குடிப்பதற்கும் உரிமை இருக்கிறது. குடித்து விட்டு வன்முறையில் ஈடுபடுவதுதான் தவறு’ அவரின் பதிவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.