திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இரயில் பெட்டிகளில் படுக்கும் வசதி கொண்ட டிக்கெட் கேன்சல்.? பயணிகளுக்கு அதிர்ச்சி..!
இரயில் பெட்டிகளில் படுக்கும் வசதி கொண்ட ஸ்லீப்பர் கோச் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த ஸ்லீப்பர் கோச் கேரளாவிலிருந்து சென்னை, பெங்களூர் செல்லும் பகல் நேர ரயில்களில் ரத்து செய்யப்படுவதாக இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக ரயில் பெட்டிகளில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது. இதில் பயணிகள் நீண்ட தூரம் இரவில் பயணம் செய்யும்போது தூங்கிக் கொண்டு செல்வார்கள்.
ஆனால் தற்சமயம் பகல் நேரங்களிலும் பயணிகள் உட்கார்ந்து கொண்டு செல்லாமல், படுத்துக்கொண்டு செல்கின்றனர். இதனால் படுக்கும் வசதியில் டிக்கெட் எடுத்தவர்களுக்கும். முன்பதிவு செய்து டிக்கெட் எடுத்தவர்களுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. இது குறித்து பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
ரயில்வே அதிகாரிகள் இதற்கு என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்து ஒரு தீர்வு கொண்டு வந்துள்ளனர். அதன்படி இரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பகல் நேரங்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுக்கு டிக்கெட் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
மேலும், இந்த திட்டம் கேரளாவில் இருந்து ஆலப்புழா - சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை - மங்களூர், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், பெங்களூர் மார்கத்தில் பகலில் இயங்கும் இரயில்களில் முதற்கட்டமாக அமல்படுத்தப்படுகிறது என தெரியவருகிறது.
இதனால் பகல் நேரங்களில் பயணம் செய்யும் பயணிகள் இடையே ஏற்படும் பிரச்சனையை சரி செய்யலாம் என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.