விளையாடி கொண்டிருந்த சிறுவன்.! கடித்து குதறிய தெருநாய்கள்.! அதிர்ச்சி சம்பவம்.!



street dogs attacking young boy

தெருநாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதும், வாகனங்களுக்கு குறுக்கே ஓடி விபத்தை எற்படுத்துவதும் அவ்வப்போது நடக்கிறது. மேலும் பல இடங்களில் தனியாக செல்பவர்களை துரத்தி சென்று கண்டிக்கின்றது தெரு நாய்கள். நோயுற்ற நாய்களால் நோய் தொற்று பரவாமல் தடுக்கவும், நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்தநிலையில், மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் 4 வயது சிறுவன் நேற்று அவனது குடியிருப்பு வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மூன்று தெருநாய்கள் சிறுவன் துரத்தி உள்ளது. இதனால் பயந்து ஓடிய சிறுவன் கால் தவறி கீழே விழுந்துள்ளார். ஆனாலும் சிறுவனை விரட்டி வந்த நாய்கள் சிறுவனை கடித்து குதறியது. 

இதனால் வலி தாங்க முடியாமல் சிறுவன் அலறல் சந்தம் போட்டுள்ளான். சிறுவனின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், நாய்களை விரட்டி அடித்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்து நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.