திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆசை வார்த்தை கூறி பெண் காவலரை சீரழித்த சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கௌரி பஜார் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக அங்கித் சிங் என்பவர் பணியாற்றி வருகிறார்.
அதே காவல் நிலையத்தில் டியோரியா என்ற இளம் பெண் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த நிலையில், இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கித் சிங், டியோரியாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனிடையே இதுகுறித்து வெளியே கூறினால் தன்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவலர் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்த நிலையில், அங்கித் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சஸ்பென்ஸ் செய்யப்பட்டுள்ளார். மேலும், டியோரியாவுக்கு விரைவில் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.